Jallikattu Bull Registration Form / ஜல்லிக்கட்டு காளை பதிவு படிவம் 
Jallikattu Bull Tamer’s Registration Form / காளையை அடக்குபவர் பதிவு படிவம் 
Application Status & Download Certificate / விண்ணப்ப நிலை & அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் 
விருதுநகர் மாவட்டம், முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசு ஆணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 இல் புதிய மாவட்டமாக உருவானது. இம்மாவட்டம் தமிழ்நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும், தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டம் மேற்கில் கேரள மாநிலமும் மற்றும் வடமேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் நிர்வாகத்தலைமையிடம் விருதுநகர் நகருக்குள் அமைந்துள்ளது. இம்மாவட்டம் மூன்று வருவாய்க்கோட்டங்களையும், பத்து வட்டங்களையும், முப்பத்தொன்பது ஃபிர்க்காக்களையும் (குறுவட்டங்கள்) அறநூறு வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.