மூடுக

மாவட்ட வரலாறு

கி.பி 19 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், நீதிபதிகளும் இப்பகுதியை நிர்வகித்தனர். 1910 இல் நிர்வாக வசதிக்காக மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பிறகு 1948 இல் ஜமீன்கள் அழிக்கப்பட்டன. 1985 இல் அரசு அறிவிக்கை, அரசாணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 – இன்படி இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இம்மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் என 3 கோட்டங்களாகவும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை மற்றும் வத்திராயிருப்பு என 10 வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.