மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

திருக்குறள் பன்னாட்டு மாநாடு -2024

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024

திருக்குறள் என்றைக்குமான இலக்கியம் என்ற தலைப்பில், திருக்குறள் பன்னாட்டு மாநாடு -2024 மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 46 KB)

மேலும் பல

உங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் 2ம் நாள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 25KB)

மேலும் பல

உங்களை தேடி உங்கள் ஊரில்” – மாவட்ட ஆட்சியர் முதல் நாள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2024

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.(PDF 38 KB)

மேலும் பல

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.5.50 இலட்சம் மதிப்பில் பல்வேறு உதவித் தொகைகளை மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும் பல

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம், மருத்துவம் தேடும் மக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி, ஊட்டச்சத்து நிதி போன்றவற்றைக் கேட்டறிந்தார்.

மேலும் பல

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இனாம்ரெட்டியாபட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 116 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 114 KB)

மேலும் பல

கரிசல் இலக்கிய விழா -2024 நிறைவு விழா

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

இரண்டாவது கரிசல் இலக்கியத்திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 65 KB)

மேலும் பல

கரிசல் இலக்கிய விழா -2024 பரிசளிப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

கரிசல் இலக்கியத் திருவிழாவில் -2024 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளர்களுக்கு இளம் படைப்பாளர் விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 59 KB)

மேலும் பல

2வது கரிசல் இலக்கிய துவக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

இரண்டாவது கரிசல் இலக்கியத்திருவிழாவினை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார். இரண்டாவது கரிசல் இலக்கியத்திருவிழாவின் தொடக்க விழாவில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் இணையவழியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். (PDF 68 KB)

மேலும் பல

அனைத்துத்துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 14/12/2024

அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அ.சண்முகசுந்தரம்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 43 KB)

மேலும் பல

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 14/12/2024

பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். (PDF 40 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024

வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அ.சண்முகசுந்தரம்,இ.ஆ.ப., அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். (PDF 124 KB)

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி ஊராட்சி எம்.தொட்டியங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024-2025) மூலம் மாவட்டத்தில் 500-வது புதிய குளத்தின் நிறைவுற்ற பணிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார். (PDF 118KB)

மேலும் பல

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அடிக்கல்

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். (PDF 115KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

வச்சக்காரப்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.(PDF 44KB)

மேலும் பல

ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

மகாகவி பாரதியார் அவர்களின் 143-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, எழுத்தார்வம் மிக்க மாணவர்களுக்கு ஒரு நாள் சிறுகதைப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41 KB)

மேலும் பல

“Coffee With Collector” 135-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024

Coffee With Collector” என்ற 135-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார். (PDF 124 KB)

மேலும் பல

முதலமைச்சர் பொது நிவாரண நிதி

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024

வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.5 இலட்சம் மதிப்பில் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38 KB)

மேலும் பல

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024

அரசு மற்றும் தனியார் கலை கல்லூரியில் பயிலும் மாணவர்களில் கல்லூரிக்கு சென்று இடைநின்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது..(PDF 113 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 113 KB)

மேலும் பல

தேசிய படைவீரர் கொடிநாள்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

தேசிய படைவீரர் கொடிநாளையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024 ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நன்கொடை வழங்கி தொடங்கி வைத்தார். (PDF 42 KB)

மேலும் பல

பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டிய 51 பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)

மேலும் பல

ஒரு நாள் பயிற்சி பட்டறை

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ‘காலநிலை மாற்றத்தில் தனிநபரின் சுற்றுச்சூழல் பொறுப்புகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41 KB)

மேலும் பல