மாவட்ட ஆட்சித்தலைவர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025காரியாபட்டி ஊராட்சி காரியாபட்டி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 52 KB)
மேலும் பல79 வது சுதந்திர தின கொண்டாட்டம் 15.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/08/202579 வது சுதந்திர தின கொண்டாட்டம் 15.08.2025 (PDF 56 KB)
மேலும் பலவிநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)
மேலும் பலவிநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)
மேலும் பலஅலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 90 KB)
மேலும் பலபொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மையம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். (PDF 112 KB)
மேலும் பலமருத்துவ உபகரணங்கள் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ்,ரூ.2.92 கோடிமதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். (PDF 118 KB)
மேலும் பல‘முதலமைச்சரின் தாயுமானவர் ‘ திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025வயதுமுதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் ‘ திட்டத்தின் கீழ் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வயதுமுதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர். (PDF 44 KB)
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க தினம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். (PDF 59 KB)
மேலும் பல‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 118 KB)
மேலும் பலஇலவச வீட்டுமனைப் பட்டா
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025முதியவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று இலவச வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 29 KB)
மேலும் பலபழங்குடியினர் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025பழங்குடியின முகாம்களில் வாழும் 71 பழங்குடியினர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆதார் அட்டைகள் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 53 KB)
மேலும் பல11-வது தேசிய கைத்தறி தினம்
வெளியிடப்பட்ட நாள்: 08/08/202511-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் 35 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.14.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 69 KB)
மேலும் பலவணிக இணைப்புக்கூட்டம் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் – 2025 நடைபெற்றது. (PDF 128 KB)
மேலும் பலகௌசிகா நதி தூர்வாரும் பணிகள் துவக்க விழா
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 36 KB)
மேலும் பலசிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 30 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் செயல்படுத்தப்படும் மின்னணு சந்தை (E-NAM) திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுக்புத்ரா, இ.ஆ.ப., ஆய்வு செய்து, திட்ட நடவடிக்கைகள், விற்பனைக் குழுவின் செயல்பாடுகள், ஒழுங்குமுறை விற்பனை மையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பலநடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 36 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 38 KB)
மேலும் பலவிழிப்புணர்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 125 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு அரசு திட்டங்களால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விவாதித்தார். மேலும், மாணவர்களின் கல்வித் தரம், கற்பித்தல் முறைகள், வருகைப் பதிவேடுகள் போன்றவற்றை ஆசிரியர்களிடம் விசாரித்தார்.
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவர்களை பாராட்டினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டுடன் மருத்துவம் படிக்க சேர்க்கை ஆணைகளைப் பெற்ற சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அழகுமாரி மற்றும் நாகரஞ்சனி மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய 3 மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஏ.பி. நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் . (PDF 29 KB)
மேலும் பலபள்ளி கலைக்கூடம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டி.கண்ணன்,த.கா.ப., ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, மாண்புமிகு நீதிபதி ஏ.தண்டபாணி, மாண்புமிகு நீதிபதி சி.சரவணன், மாண்புமிகு நீதிபதி பி.புகழேந்தி, மாண்புமிகு நீதிபதி மு.மு.ராமகிருஷ்ணன், மாண்புமிகு நீதிபதி திருமதி சு.பூர்ணிமா ஆகியோர் கலைக்கூடத்தைத் திறந்து வைத்தனர்.
மேலும் பல