மூடுக

சுற்றுலா

திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோவில்

திருச்சுழி குண்டாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. திருச்சுழி பூமிநாதசுவாமி கோவில் பாண்டிய நாட்டில் புகழ் பெற்ற 14 சைவ திருத்தலங்களில் ஒன்றாகும். இவ்வூர் விருதுநகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் கிழக்கே அமைந்துள்ளது. தென் மதுரையிலிருந்து 45 கி.மீ தொலைவில் ஸ்தலம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தின் மூலவர் பூமிநாதர், அம்மன் துணைமாலையம்மன் அமைந்துள்ளது. சைவ நாயனார் முருகேசு மற்றும் சேக்கிழார் பாடல்கள் பாடியுள்ளனர். முத்துராமலிங்க சேதுபதி ஆட்சிக்காலத்தில் இந்த ஸ்தலத்தை சுற்றி பெரிய உயரமான மதில்கள் கட்டப்பட்டு இவருடைய ஆட்சிக்காலத்திலேயே பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இந்த திருத்தலம் புனிதமான இடமாகும்.

ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமம்

ஸ்ரீரமண மகரிஷி அவர்கள் 30.12.1879 அன்று திருச்சுழியில் அவதரித்தார். இவரின் பெற்றோர்கள் தாய் திருமதி.அழகம்மாள், தந்தை திரு.சுந்தரம் ஐயர். இவருடைய இயற்பெயர் வெங்கட்ராமன். இவர் திருச்சுழியில் உள்ள சேதுபதி ஆரம்ப பள்ளியில் படித்தார். இவர் ”சுந்தர மந்திரம் ” வீட்டில் வாழந்தார். அவருடைய போதனைகளை பரப்புவதற்காக குண்டாறு நதிக்கரையில் 1988 ஆம் ஆண்டு அவருடைய பெயரில் ஆசிரமம் நிறுவப்பட்டது. இவரது உபதேசங்களின் தொகுப்பான ”நான் யார்?” என்ற புத்தகம் சிறப்பானது ஆகும்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லம்

பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு இல்லமானது அவர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த மாபெரும் தலைவர் வாழ்ந்த வீடானது தமிழக அரசால் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது. இந்த இல்லத்தில் அவரது ஒவ்வொரு நிலைகளின் தலைவர் நிழற்படங்கள் அவர் பயன்படுத்திய உடைகள், கைகடிகாரம், அவர் எழுதிய புத்தகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சஞ்சீவி மலை

சஞ்சீவி மலை ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி போகும் பாதையில் உள்ளது. இதன் ரம்மியமும், ஆழ்ந்த அமைதியான சூழல் சுற்றுலா வருபவர்களுக்கு பிடித்த இடமாக உள்ளது. இலங்கை போரில் மூர்ச்சையடைந்த இலக்கவனை, காப்பாற்ற அனுமான் தூக்கி வந்த சஞ்சீவி மலையில், தேவையான மூலிகைகளை எடுத்துக் கொண்ட பின், வீசி எறியப்பட்ட மலையாக இதிகாசத்தில் கூறப்படும் மலை இந்த சஞ்சீவி மலை.

பள்ளிமடம்

பள்ளிமடம் குண்டாற்றின் கிழக்கு கரையோரம் திருச்சுழி ஊரின் வெளியே 1 கி.மீ தூரத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பெயரும், புகழும், புலமையும் பெற்று சிறந்த சுந்தரபாண்டிய மன்னன் பள்ளிமடத்திற்கு வந்த போது மரணமடைந்தார். அவரது இளைய சகோதரன் வீரபாண்டியன் (பொ.ஆ.பி.946-966) தனது தனையன் நினைவாக அவரது கல்லறையில் எழுப்பிய சிற்பக்கலை கூடம் பள்ளிப்பாடை என்றழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் கோவில் பள்ளிப்பாடை சுந்தரபாண்டிய சுவரமுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டது. தற்போது காளைநாத சுவாமி கோவில் என்றழைக்கப்படுகிறது. பள்ளிபாடை என்ற பெயர் மருவி பள்ளிமடம் என்றாகியது. இங்கு உள்ள சிற்பக் கோவில் பாண்டியர் காலத்து கோவில்களில் தனித்தன்மையானது

குகன்பாறை

வெம்பக்கோட்டையிலிருந்து கழுகுமலை செல்லும் பாதையில் குகன்பாறை அமைந்துள்ளது. அந்த குன்றின் பெயராலேயே அழைக்கப்படும். குகன்பாறை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ளது. இங்கு இயற்கையாக அமைந்த படும்கைகளை சைவ சமயத்துறவிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பொது ஆண்டுக்குப்பின் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்ட எழுத்துக்கள் இங்குள்ள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. முன்னூரவர் பிள்ளைகள் (கோவில் பணியாளர்கள்)