மூடுக

அய்யனார் அருவி, இராஜபாளையம்

அய்யனார் அருவி, இராஜபாளையம் நகருக்கு மேற்கே பத்து கி.மீ தொலைவிலமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கே கிழக்கு சரிவுகளில் உள்ளது. பருவ மழையே இவ்வருவிக்கு ஆதாரமாகும். இவ்வருவியின் நீர், மிகவும் தூய்மையாக இருக்கும் என நம்பப்படுவதால் அருகிலுள்ள கிராமங்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்படுவதுடன் சுற்றுப்பகுதியுலுள்ள விவசாயிகளால் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அய்யனார் அருவிக்கு அருகிலுள்ள வனப்பகுதி சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் மேற்கொள்ள சிறந்த இடமாகும்.

புகைப்பட தொகுப்பு

  • அய்யனார் நீர்வீழ்ச்சி
  • Ayyanar Falls Hill way

அடைவது எப்படி:

சாலை வழியாக

இராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்து, தனியார் கார் மற்றும் ஆட்டோ மூலம் அய்யனார் அருவிக்கு சென்றடையலாம்.