செய்தி வெளியீடுகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 73 KB)
ஊரக வளர்ச்சித் துறை ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 128 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12-10-2026
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.77 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 58 KB)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 72 KB)
காச நோய் இல்லா இந்தியா இயக்கம் – ‘ஜோஷ்’
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026காச நோய் இல்லா இந்தியா இயக்கதினை – ‘ஜோஷ்’ (JOSH TEAM) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 86 KB)
வன உயிரின வார விழா- 2026
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026வன உயிரின வார விழா- 2026 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 181 KB)
புதிய வழித்தட பேருந்து சேவை
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 71 KB)
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” மூலம் 3098 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 108 KB)
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)
பேரிடர் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழைக்கால பேரிடர் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05-10-2026
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.8.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 61 KB)
கிராம சபைக் கூட்டம் – 02-10-2026
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2026விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடமலைக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். (PDF 96 KB)
“வெற்றி பயணம்” திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2026“வெற்றி பயணம்” திட்டத்தின் கீழ் 286 பேருந்துகள் இயக்கம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 60 KB)
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158 ஆவது பிறந்த நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2026அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். (PDF 70 KB)
மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 86 KB)
முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. (PDF 57 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2,53,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 52 KB)
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயலாக்கத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 138 KB)
புதிய நவீன ஆதார் சேவை மையம்
வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை(Aadhaar Seva Kendra) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 60 KB)
“திசை- தமிழை அறிவோம்”
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026“திசை- தமிழை அறிவோம்” தமிழி வரி வடிவங்களை அறிதல் பயிற்சி பெற்று 1330 திருக்குறளை தமிழி வடிவத்தில் எழுதிய மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். (PDF 46 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026மாவட்டத்தில் மொத்தம் 705.608 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு உள்ளது என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 96 KB)
கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 60 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 55 KB)
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்ட முன்னேற்பாடு பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 51 KB)
மாவட்ட ஆட்சியர் TNPSC தேர்வை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ய்வு செய்தார். (PDF 130 KB)