மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவர்களை பாராட்டினார்
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு
அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டுடன்
மருத்துவம் படிக்க சேர்க்கை ஆணைகளைப் பெற்ற சாத்தூர்
ஊராட்சி ஒன்றியம், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியைச்
சேர்ந்த அழகுமாரி மற்றும் நாகரஞ்சனி மற்றும் ராஜபாளையம்
ஊராட்சி ஒன்றியம், சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச்
சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய 3 மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஏ.பி. நேரில் அழைத்துப் பாராட்டினார்.