மாவட்ட ஆட்சித்தலைவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பஞ்சாயத்து ஒன்றியம், ஏ.முக்குளம்
கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில்
தனியார் அமைப்பான சுரபி அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும்
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியினை
மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில்
பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், மாணவர்களின் எண்ணிக்கை,
அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள்
போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு விளையாட்டுப்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்
சான்றுகளை வழங்கினார்.