மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2025

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு அரசு திட்டங்களால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விவாதித்தார். மேலும், மாணவர்களின் கல்வித் தரம், கற்பித்தல் முறைகள், வருகைப் பதிவேடுகள் போன்றவற்றை ஆசிரியர்களிடம் விசாரித்தார்.