கௌசிகா நதி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024

விருதுநகர் கௌசிகா நதி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நதியில் கழிவுநீர் கலத்தல் மற்றும் குப்பைகள் கொட்டுதலை தடுப்பது குறித்தும், நதியினை மாசடையாமல் பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.