வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில், “வாக்காளர் என்பதை உறுதி செய்வீர்” என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்ய 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய 4 நாட்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. (PDF 81 KB)