பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின்
உப்பத்தூர் கிளையின் மூலம் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் (PMSBY)
கீழ் இறந்த திரு. லட்சுமணனின் என்பவரின் வாரிசுதாரார் திரு. செல்வபாண்டிக்கு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு காசோலையை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.பா., வழங்கினார். உடன் மண்டல மேலாளர் (தமிழ்நாடு கிராம வங்கி) திரு. ஜெயஹர் ஆனந்த், துணை மண்டல மேலாளர் திரு. சம்பத்குமார், உப்பத்தூர் கிளை மேலாளர் திரு. கிஷோர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. பாண்டிசெல்வன் ஆகியோர் உள்ளனர் .