மூடுக

பொருளியல் மற்றும் புள்ளியல் துறை

நோக்கங்கள்:

  • மாநில வருமான மதிப்பீடுகள், பொருளாதார கணக்கெடுப்பு, வேளாண் கணக்கெடுப்பு, சிறப்பு ஆய்வுகள் மற்றும் மாநில பொருளாதாரத்தின் மாதாந்திர அறிக்கைகள் உட்பட பொது மற்றும் தனியார் தரவு மூலங்களின் புள்ளிவிவர தரவு சேகரிப்பு, தொகுத்தல்.
  • பயிர்கள் வாரியாக பாசன மற்றும் நீர்ப்பாசன பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் புவியியல் நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை சேகரிக்கவும் மற்றும் நில பயன்பாட்டு முறை, பயிர் பல்வகைப்படுத்தல், பாசன மற்றும் பயிர்கள் பற்றிய பல்வேறு திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றிற்கான தரவு பயன்படுத்தப்படுகிறது.

நடைமுறையில் உள்ள திட்டங்கள்

பயிர் மதிப்பீட்டு ஆய்வு

தமிழ்நாட்டில் நெல் சிறுதானியங்கள் ( சோளம் , கம்பு , கேழ்வரகு ) , வேர்க்கடலை , எள் , சூரியகாந்தி , கரும்பு , பருத்தி , பயறுகள் (துவரை , உளுந்து , பச்சைப்பயிறு ) ஆகிய பயிர்களின் சராசரி விளைச்சலையும், மொத்த உற்பத்தியையும், துல்லியமாகக் கணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் புள்ளி இயல் துறை பயிர் மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்தி வருகிறது . தேசிய மாதிரி ஆய்வு நிறுவன இயக்குநரின் தொழில் நுட்ப ஆலோசனைகளின் கீழ் இப்பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்பபடுகின்றன .
பயிர் மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய மாதிரி கிராமங்கள் புள்ளி இயல் துறையால் தேர்வு செய்யப்பட்டு பயிர் அறுவடைப் பணி வேளாண்மைத் துறை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு , களப்பணி பல்வேறு நிலைகளில் குறிப்பாக அறுவடை நிலையில் புள்ளி இயல் துறை வேளாண்மைத் துறை, தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்களால் மேற்பார்வையிடப்படுகின்றன.

பிரதம மந்திரி வேளாண் காப்பீட்டுத் திட்டம்

புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல்.

சிறுபான்மைப் பயிர் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் விளைச்சலை மாவட்ட அளவில் கணிப்பதற்காக மிளகாய் , மல்லி , மரவள்ளி , வெங்காயம் மற்றும் முந்திரி ஆகிய பயிர்களில் ஒவ்வொரு வருடமும் தேர்விடப்பட்ட கிராமங்களில் தோட்டக்கலைத் துறையினராலும் , புள்ளி இயல் துறையினராலும் மேற்கொள்ளப்படுகிறது .

பயிர் மேம்பாட்டுத் திட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களால் ஒவ்வொரு பருவத்திலும் பயிர் பரப்பாய்வு சாpயான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா , கிராம நிர்வாக அலுவலர்களால் பேணப்படும் அடங்கலில் பயிர் பரப்பின் கூட்டுத் தொகை சரியாக உள்ளதா என சரிபார்த்தல் பணி புள்ளி இயல் துறையால் மேற்கொள்ளப்படுகிறது.

தென்னை கமுகு ஆய்வு

ஒரு வட்டாரத்தில் ஓர் கிராமம் தேர்வு செய்யப்பட்டு 2 தென்னந்தோப்புகள் மற்றும் கமுகு தோப்புகள் தேர்வு செய்யப்பட்;டு , விளைச்சல் கணக்கிடப்படுகிறது . இதில் சாகுபடி முறை மற்றும் தேங்காய் பயன்படுத்தும் முறைகள் , சொந்த உபயோகம் , விற்பனை அளவு , எண்ணெய்க்குப் பயன்படுத்தும் அளவு ஆகியவை கணக்கிடப்படுகிறது .
பயிர் பரப்பு உரிய காலத்தில் மதிப்பிடும் திட்டம்

ஒவ்வொரு வட்டாரத்திலும் 20% கிராமங்கள் தேர்விடப்பட்டு அந்த கிராமங்களில் மட்டும் பயிர் அறுவடை ஆய்வு , மற்ற திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . அந்த கிராமங்களில் அனைத்து பருவங்களிலும் அடங்கல் சரியாகப் பேணப்பட்டு காரிப் , ராபி மற்றும் கோடை பருவங்களில் அடங்கல் மற்றும் முக்கியப்பயிர்களின் பரப்பு ஆய்விடப்படுகிறது.
விற்பனை மிகுதித் திட்டம்

குறிப்பிட்ட வட்டாரத்தில் தேர்விடப்பட்ட கிராமத்தில் நெல் பயிரில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் மொத்த மகசூல் ,விவசாயக் கூலி விவரங்கள், விதை அளவு , சொந்த நுகர்வு மற்றும் விற்பனை செய்த அளவு ஆகியவை கணக்கிடப்படுகின்றன.
வட்டாரப் புள்ளி இயல் கையேடு

ஒவ்வொரு வட்டாரத்திலும் கிராம வாரியான பரப்பு விவரங்கள் , மக்கள் தொகை விவரங்கள், வேளாண்மைக் கணக்கெடுப்பு விவரங்கள் , கல்வி நிலையங்கள் , மருத்துவ நிலையங்கள் , அஞ்சலகங்கள் மற்றும் நூல் நிலையங்கள் பற்றிய விவரங்கள் , ஊராட்சி ஒன்றிய திட்டங்கள் மற்றும் இதர திட்டங்கள் குறித்த அட்டவணைத் தொகுப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது .
நகராட்சி புள்ளி இயல் கையேடு

ஒவ்வொரு நகராட்சியிலும் வார்டு வாரியான பரப்பு விவரங்கள் , மக்கள் தொகை விவரங்கள், வேளாண்மைக் கணக்கெடுப்பு விவரங்கள் , கல்வி நிலையங்கள் , மருத்துவ நிலையங்கள் , அஞ்சலகங்கள் மற்றும் நூல் நிலையங்கள் பற்றிய விவரங்கள் , ஊராட்சி ஒன்றிய திட்டங்கள் மற்றும் இதர திட்டங்கள் குறித்த அட்டவணைத் தொகுப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது
மாவட்டப் புள்ளி இயல் கையேடு

ஒவ்வொரு ஆண்டிற்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து புள்ளி விவரங்களும் உரிய அட்டவணைகளில் தொகுத்து மாவட்டப் புள்ளி இயல் கையேடு தயாரிக்கப்படுகிறது .
வீட்டு வசதித் திட்டம் (பொதுத் துறை )

ஊராட்சி ஒன்றியத்தால் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் ரூ. 2,50,000 , க்கு மேலும் , கீழும் கட்டப்படும் கட்டிடங்கள் பற்றிய திட்டப் பட்டியல் புள்ளி விவரங்கள் – அனுமதிக்கப்பட்ட நாள் , மதிப்பீட்டுத் தொகை , கட்டிடம் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் கட்டி முடிக்கப்பட்ட விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சேகரித்து நேரடியாக மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது
வீட்டு வசதித் திட்டம் (தனியார் துறை )

ஒவ்வொரு பேருராட்சியிலும் தனியாரால் கட்ட அனுமதி பெறப்பட்ட கட்டிடங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் சேகரித்து நேரடியாக மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது . அரசுக்கு இவ்விவரங்கள் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்விட உதவியாக உள்ளது .
மொத்த விலை குறியீட்டு எண்

மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களின் மொத்த விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டு துறைக்கு அனுப்பப்படுகிறது.
கைத்தறி திட்டம்

ஒவ்வொரு மாதமும் குவி மையத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கைத்தறி நெசவாளர்களிடம் உற்பத்தி விவரங்களும் சேகரித்து புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது . கைத்தறி துணியின் உற்பத்தி பற்றி இதன் முலம் தெரிவிக்கப்படுகிறது .
அங்காடி புலனாய்வு திட்டம்

ஜெயங்கொண்டம் மையத்தில் தினசரி குறிப்பிட்ட பொருட்களின் அங்காடி , ஒழுங்குமறை விற்பனைக் கூடத்தில் நிலவும் விலை விவரங்கள் , நெல் , அரிசி , இருப்பு , வரத்து , அனுப்புகை விவரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது . மற்றும் வாராந்திர விலைவாசி அறிக்கை மத்திய அரசுக்கும் அனுப்பப்படுகிறது .
மழைப் புள்ளி விவரம்

இம்மாவட்டத்தில் உள்ள மழைமானி நிலையங்களிலிருந்து மழைப் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது .
விவசாயக் கூலி விவரம்

ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிலவும் விவசாயக் கூலி விவரங்கள் சேகரித்து , அரசு நிர்ணயித்துள்ள கூலி குறைவா , அதிகமா எனக் காரணம் குறிப்பிட்டு விவரங்கள் புள்ளி இயல் துறைக்கு அனுப்பப்படுகிறது .

தேசிய மாதிரி ஆய்வு

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொர் ஆண்டும் 12 கிராமங்கள் எதேச்சை எண் முறையில் அரசால் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களுக்காக கொள்கைகள் வகுக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டுக்கும் கல்வி மருத்துவம், வேலை வாய்ப்பு, நுகர்வு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறைக்கு அனுப்பப்படுகிறது. இது போன்று தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராங்களின் விவரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்புகிறது.

பழம் மற்றும் காய்கறித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பலா பயிருக்கான சில கிராமங்கள் எதேச்சை எண் முறையில் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையால் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இக்கிராமங்களில் புள்ளிஇயல் துறை அலுவலர்களால் கிராமத்திற்கு இரு தோப்பக்களை எதேச்சை முறையில் தேர்வு செய்து அறுவடை விவரங்களை பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படுகிறது.

துறையின் பெயர் மற்றும் முகவரி

புள்ளிஇயல் துணை இயக்குநர் அலுவலகம்,
எண்:203, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
விருதுநகர்.
தொலைபேசி எண் : 04329 228680.
மின்னஞ்சல் : adsvnr[at]gmail.com
பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, தமிழ்நாடு – இணையதளம் முகவரி http://www.tn.gov.in/deptst