சாத்தூரில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/07/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில்
சென்று ஆய்வு செய்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்து, சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம்
கலந்துரையாடினார். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகளின் தரம் மற்றும் மருத்துவத்
திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.